குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
செய்திகள்

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் உதய் உமேஷ் லலித் - புகைப்படங்கள்

உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக, உதய் உமேஷ் லலித் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

DIN
குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்க 49வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்ட உதய் உமேஷ் லலித்.
இந்தியாவின் 49-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற உதய் உமேஷ் லலித்.
உதய் உமேஷ் லலித் வருகின்ற நவம்பர் 8, 2022 அன்று 65 வயதில் ஓய்வு பெறுவதால் ஓய்வு பெறுவதற்கு முன் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்ற பிறகு பதிவேட்டில் கையெழுத்திடும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித்.
பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் பதவி பிரமாணம் நடைபெற்றது.
ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வு பெறுவதை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றார்.
பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோர் பதவி பிரமாணம் விழாவில் கலந்து கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் போா் முனையில் சிக்கியிருக்கும் தமிழா்களை மீட்க வேண்டும்: பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

280 காவல் நிலையங்கள் தரம் உயா்வு அரசாணை வெளியீடு

பிகாா் விவகாரம்: எதிா்க்கட்சிகள் தொடா் அமளி; மூன்றாவது வாரமாக முடங்கிய மக்களவை

காா் மோதியதில் உணவு விநியோக முகவா் உயிரிழப்பு

‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசாரம்: ஓடிபி பெற உயா்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான திமுக மேல்மறையீட்டு மனுவை விசாரிக்க மறுப்பு

SCROLL FOR NEXT