வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் ஒலிபெருக்கி மூலம் கடற்கரைக்கு வர வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
புயலின் எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை நுழைவு வாயிலுக்கான பாதைகள் மூடப்பட்டு எச்சரிக்கை விடுத்து வரும் காவல் துறையினர்.புயல் காரணமாக மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என சென்னை காவல்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.மெரினா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டு காவல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.கனமழை பெய்து வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள்.காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் கடற்கரையில் செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.கடற்கரை பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்து செல்பி எடுத்து வருகின்றனர்.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.