ஜலந்தரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசம் செய்யும் நபர் ஒருவர். 
செய்திகள்

யோகா மஹோத்சவம் 2023 - புகைப்படங்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் ஆரோக்கியமாக இருக்க பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.

DIN
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆக்ராவில் உள்ள காதி சாந்தினி கிராமத்தில் யோகா பயிற்சி மேற்கொண்ட குழந்தைகள்.
ஆக்ராவில் யோகா பயிற்சியாளர் தலைமையில் மாணவ, மாணவியர் தொடர்ந்து சூரியநமஸ்காரம் செய்து சாதனை படைத்தனர்.
கோழிக்கோட்டில் நடைபெற்ற யோகா போட்டியில் திரளான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மும்பையில் உள்ள சர் எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையின் மறுவாழ்வு மருத்துவ மையத்தில் கர்ப்பிணிப் பெண்கள் எளிதாக பிரசவிக்க மேற்கொண்ட யோகா பயிற்சி.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மும்பையில் கடற்படை கப்பலில் கடற்படை வீரர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
சூரத்தில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குருகுல மாணவர்கள் மேற்கொண்ட யோகா பயிற்சி.
மாணவர்கள் தங்களின் திறமை வெளிகொண்டு வரும் வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர் வரை தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்தனர்.
யோகா பயிற்சியை அன்றாடம் செய்து வர தலை முதல் கால்வரை உடலும், மனமும் ஆரோக்கியமடைகிறது.
யோகா தினத்தை முன்னிட்டு சூரத்தில் யோகா செய்து அசத்திய குருகுல மாணவர்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் நடைபெற்ற யோகா மற்றும் தியான பயிற்சியில் கலந்து கொண்ட கடற்படை வீரர்கள்.
ஜலந்தரில் யோகா பயிற்சி மேற்கொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
ஜலந்தரில் உள்ள பிஏபி மைதானத்தில் மக்களுடன் உரையாற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்கில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொண்ட இளைஞரணி செயலாளர் மீதா ஆர் லோச்சன் மற்றும் பலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT