முகப்பு
செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்தது ஜிஎஸ்எல்வி-எஃப் 12 ராக்கெட் - புகைப்படங்கள்

நாட்டின் வழிகாட்டுதல் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ள என்விஎஸ்-1 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ராக்கெட்டுக்கான கவுன்ட்டவுனை நேற்று காலை தொடங்கியது.
பகிர்:
27.30 மணி நேர கவுன்ட்டன் முடிவில் இன்று காலை 10.42 மணிக்கு செயற்கைக்கோளை ஏந்தியவாறு ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து காலை 10.42 மணியளவில் 'ஜிஎஸ்எல்வி எஃப்-12' ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
'என்விஎஸ்-01' செயற்கைக்கோள் 2,232 கிலோ எடை கொண்டது.
இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம் திறன் கொண்டது. கடல்சார் இருப்பிடம், பேரிடர் மேலாண்மை தகவல்களை வழங்கும்.
செல்போன்களுக்கான நேவிகேஷன் வசதி, அரசு, நிதி, மின்துறை நிறுவனங்களுக்கு தரவுகளை பெறமுடியும். தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும் இந்த செயற்கைக்கோள்.
தரை, கடல், வான்வெளி போக்குவரத்தைக் கண்காணிக்கும் இந்த செயற்கைக்கோள்.
இந்த செயற்கைக்கோளில் முதன் முதலாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரம் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூமி சுற்றும் திசைக்கு ஏற்ப ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோள் சுற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.