ஜி-20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்தின் முன்பு சுமார் 18 டன் எடையும் அஷ்டதாதுக்களால் வடிவமைக்கப்பட்ட 28 அடி உயர உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சுவாமிமலையில் இருந்து புதுதில்லிக்கு கொண்டு செல்லப்பட்ட 28 அடி உயர பிரம்மாண்ட நடராஜர் சிலை.மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலையை அமைக்க மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்தது.28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடையில் செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8உலோகங்களை கொண்ட அஷ்டதாதுக்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.ஜி-20 மாநாட்டு முகப்பில் நிர்மாணிக்கப்பட்ட நடராஜர் சிலை.தில்லி பிரகதி மைதானம் முகப்பில் பிரம்மாண்டமான நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.கம்பீரமாக நிற்கும் நடராஜர் சிலை சுற்றியுள்ள பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.