மகா கும்பமேளா முன்னிட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் நீராட புதுதில்லியிலிருந்து பிரயாக்ராஜ் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்.
மகா கும்பமேளாவுக்கு செல்ல முந்தியடித்து கொண்டு ரயில் ஏறும் பயணிகள்.விடுமுறை நாளையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.பிரயாக்ராஜ் விரைவு ரயிலுக்காக நடைமேடை 14 ல் சனிக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான பயணிகள் குவிந்தனர்.ஸ்வதந்திர சேனானி மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி ஆகிய விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14ல் திரண்டனா்.கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய ரயில்வே காவலர்கள் பணியில் இல்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவிப்பு.