சென்னை மணலி ஐ.ஓ.சி.எல். நிறுவனத்திலிருந்து சரக்கு ரயில் 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்ற போது சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்துக்குள்ளானது. -
பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.விபத்தில் சிக்னல் ஃபோர்டுகள், மின் இனைப்பு கம்பி உள்ளிட்டவை சேதமடைந்தன.தீ விபத்து காரணமாக கடும் புகை கிளம்பியது.தீ மளமளவென அடுத்தடுத்த டேங்கர்களுக்கும் பரவி, கொழுந்து விட்டு எரிந்து.சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில்கள், விரைவு ரயில்கள் ரத்து.தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர்.பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்.