கொல்கத்தாவில் நடைபெற்ற டிவிஎஸ் என்டார்க் 150 அறிமுக விழாவில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் அனிருத்தா ஹல்தார் உடன் கொல்கத்தா பிராந்திய மேலாளர் விவேக் ஜெயின் ஆகியோர். Swapan Mahapatra
14 இன்ச் வீல்கள், இரண்டு பக்க வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், 5 இன்ச் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளிட்ட ப்ரீமியமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.ஸ்ட்ரீட் மற்றும் ரேஸ் என இரண்டு சவாரி முறைகளும் டிவிஎஸ் என்டார்க் 150-ல் வழங்கப்படுகிறது.149.7cc, ஏர்-கூல்டு, O3 சிடெக் எஞ்சின் மூலம் இயக்கப்படும். இது 7,000 ஆர்பிஎம்-ல் 13.2 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-ல் 14.2 என்.எம். டார்க்கை வழங்கும்.6.3 வினாடிகளில் 0-60 கிமீ வேகத்தையும், மணிக்கு 104 கிமீ வேகத்தை எட்டும்.புதிய டெலெஸ்கோபிக் சஸ்பென்ஷன், சரிசெய்யக்கூடிய பிரேக் லீவர்கள், காப்புரிமை பெற்ற இ.இசட் (EZ) சென்டர் ஸ்டாண்ட் மற்றும் 22 லிட்டர் இருக்கைக்கு அடியில் சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது.149.7 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. குவாடு ப்ரொஜெக்டார் முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.டிவிஎஸ் என்டார்க் 150 அறிமுக விலை ரூ.1.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம்.