உலகப்பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டாதால், விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம். - ANI
பகிர்:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிறப்பாக முடிந்த நிலையில், கோயிலை சுற்றி உள்ள நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. - ANIசுந்தரேசுவரர், மீனாட்சியம்மன் அம்மன் எழுந்தருளிய தேர் புறப்பட்டபோது தேரின் முன்பாக கயிலாய வாத்தியங்களான கொம்புத்தாரை, கொக்கறை, சேமக்கலம், சங்கு, நகரா, உடுக்கை, பிரம்மதாளம், தப்பு ஆகிய இசைக்கருவிகளை இசைத்தபடி சென்ற சிவ பக்தர்கள். - ANIபக்கதர்கள் விண்ணதிர, விதவிதமான கயிலாய வாத்தியங்கள் முழங்க தேர் ஆடி அசைந்து பவனி வந்தது. - ANI
Advertisement
பிரம்மாண்ட தேரில் சுந்தரேசுவரர் உடன் பிரியாவிடையும், அதன் பின் மீனாட்சியம்மன் பச்சைபட்டுடுத்தி எழுந்தருளிய சிறிய தேரும் ஒன்றன் பின் ஒன்றாக வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்.பக்தி முழக்கத்தோடு தேர்களை வடம் பிடித்து இழுத்து வழிபட்ட பக்தர்கள்.