ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு
அதிமுக அலுவலகத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலையை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இச்சிலையானது, 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையில் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.