அரசியல்

மகாத்மா காந்தி - வாஜ்பாய் நினைவிடத்தில் மோடி மரியாதை

நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.  அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் மோடி மரியாதை செலுத்தினார். மோடியுடன் அமித்ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.  தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க இருக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்களும், வெளிநாட்டுத் தலைவர்கள், உள்நாட்டு அரசியல் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், பல்துறை வல்லுநர்கள், திரைப்படத் துறை பிரபலங்கள் என பலர் பங்கேற்கின்றனர். 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு

லிடியன் நாதஸ்வரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அடிவயிற்றில் வாயுவின் அழுத்தம் நீங்க...

நிலவொளி அவள்... வாணி போஜன்!

SCROLL FOR NEXT