காந்தி சிலைக்கு கவர்னர் - முதல்வர் மலர்தூவி மரியாதை
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.