அம்மா வாஷிங்மெசின் முதல் வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வரை பல இலவச அறிவிப்புகளுடன் அதிமுக தலைமையகத்தில் பல்வேறு வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக. 
அரசியல்

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - புகைப்படங்கள்

DIN
அம்மா இல்லம் திட்டம் என்ற பெயரில் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக காங்கீரிட் வீடு என்ற திட்டம்.
விலையில்லா அரசு கேபிள் இணைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
இலவசமாக ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும், கல்விக்கடன் ரத்து செய்யப்படும், ஆட்டோ வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்..
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை, ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் உதவித்தொகையும் தொடர்ந்து வழங்கப்படும்.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யப்படும்.
நம்மாழ்வார் பெயரில் வேளாண்மைப் பல்கலைக் கழகம் அமைக்கப்படும், கல்லூரி மாணாக்கர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி இலவச டேட்டாவும், பனைமரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்.
திருநங்கைகளுக்கு சிறுதொழில் மானியம் ரூ.20,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்வு, கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்வு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி எனது நண்பர்; சிறந்த பிரதமர்! மாற்றிப் பேசும் டிரம்ப்!

பெண்களை தொடக்கூடாது.. தலிபான்களின் உத்தரவால் துயரம்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

நெல்லை ரயில் நிலையம் முன் இளைஞர் வெட்டிக் கொலை!

செவலபுரை ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வருடாபிஷேக விழா

SCROLL FOR NEXT