பிரிட்டன் பிரதமரை வரவேற்ற பிரதமர் மோடி - புகைப்படங்கள்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு பேச்சுகள் நடத்தப்பட உள்ளது.
இந்தியா வருகை தந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, தில்லியில் அரசு மரியாதையுடன் வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:
பரஸ்ஸ்பரம் வணக்கம் செலுத்தி கைக்குலுக்கி நலம் விசாரித்த தலைவர்கள்.மக்களை நோக்கி கையசைத்த பிரதமர் மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.தில்லி ராஷ்ட்ரபதி பவனில் போரிஸ் ஜான்சனுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த பிரதமர் மோடி.போரீஸ் ஜான்சன் வருகை, இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் என எதிர்பார்ப்பு.தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.போரிஸ் ஜான்சனுக்கு மார்பளவு காந்தி சிலை பரிசாக வழங்கப்பட்டது.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.இந்தியா - பிரிட்டன் இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு பேச்சுகள் நடத்தப்பட்டது.