அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின் - புகைப்படங்கள்
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராகப் பதவியேற்றார்.
அமைச்சராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்வருக்கு மலர் கொத்து வழங்கி வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் முதல்வர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வருடன் அமைச்சர்கள்.
பதவிப் பிரமாணம் முடிந்த பிறகு அங்கிருந்து புறப்பட்ட உதயநிதி ஸ்டாலின் முன்னாள் மாநில முதல்வர்கள் சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகியோரின நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், அதிகாரிகள், உதயநிதியின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராகப் பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறையின் அருகே வைக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பலகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.