நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். உடன் பிரியங்கா காந்தி.
அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, சோனியா காந்தி ஆஜரானார்.சோனியா காந்தியுடன் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரும் பிரியங்கா காந்தி.நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ள புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து ஆஜர்.மத்திய தில்லியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள வித்யுத் லேன் பகுதியில் அமைந்துள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜரானார்.அமலாக்கத் துறை முன்பு ஆஜரான சோனியா காந்தியிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்த நிலையில் மீண்டும் ஆஜராகுமாறு சம்மன்.அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரும் எம்.பி. ராகுல் காந்தி.அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் உடன் ப. சிதம்பரம்.சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் போராட்டம் நடத்தினர்.சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, தில்லியில் செய்தியாளர்களிடம் தனது கண்டனத்தை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்.போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களான கொடிக்குன்னில் சுரேஷ், அஜோய் குமார் ஆகிய தலைவர்களை கைது செய்து அழைத்து செல்லும் காவல்துறையினர்.சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.