மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பதாகை ஏந்தி பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 
அரசியல்

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - புகைப்படங்கள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க தயார் என தெரிவித்துள்ள நிலையிலும் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தரக் கோரி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியுள்ளனர்.

DIN
அமைதி மற்றும் மனிதாபிமானத்திற்காக பேசுங்கள் என்ற பதாகை ஏந்தி பெங்களூருவில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள்.
இன வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக சிபிஐ-எம்எல், ஏஐஎஸ்ஏ, ஏஐபிடபிள்யூஏ மற்றும் ஆர்ஐஏ ஆகியவற்றின் தொண்டர்கள் பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தைக் கண்டித்து புதுதில்லியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.
இனக்கலவரத்தை கண்டித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பதாகைகளை ஏந்தியபடி பெங்களூருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து, தானேவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பிய காங்கிரஸ் தொண்டர்கள்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து தானேவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்.
மணிப்பூரில் நடைபெற்று வரும் இன வன்முறைக்கு எதிராக ஹைதராபாத்தில் பதாகைகளை ஏந்தியபடி வந்த ஆதரவாளர்கள்.
இனக்கலவரத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் சிறுபான்மை இளைஞர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம்.
மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக கெளஹாத்தியில் ஆம் ஆத்மி கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் வந்தனர்.
மணிப்பூரில் நடந்த இனக்கலவரத்தை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் மும்பையில் ஆர்ப்பாட்டம்.
இனக்கலவரத்தை கண்டித்து பதாகை ஏந்தி ஆம் ஆத்மி கட்சியினர் மும்பையில் ஆர்ப்பாட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT