பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி மண்டியாவில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கர்நாடக முதல்வர் பசவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாண்டியாவில் இன்று நடைபெறும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூரு - மைசூரு இடையேயான 118 கி.மீ. தூர 10 வழி நெடுஞ்சாலை, ஹுப்ளி - தார்வாட் இடையிலான சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.மாண்டியா மற்றும் ஹுப்பாளி-தார்வாத் விரைவுச் சாலையினை அவர் தொடங்கி வைத்தார். இந்த விரைவுச் சாலை ரூ.16 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.மாண்டியாவிற்கு வருகை தரும் பிரதமரை மலர் தூவி வரவேற்ற மக்கள்.பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்.தனது கார் மீது இருந்து மலர்களை எடுத்து பொதுமக்கள் மீது தூவிய பிரதமர் மோடி.பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும் நின்று மலர்கள் தூவி பொதுமக்களும் பாஜகவினரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மக்கள் வரவேற்பை ஏற்கும் விதமாக பிரதமர் மோடி கார் படியில் நின்று மக்களை நோக்கி கைகளை அசைத்தவாறு சென்றார்.பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்த பிரதமர் மோடி.