வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். 
அரசியல்

கர்நாடக தேர்தல்: பிரதமர் மோடியின் பிரமாண்ட ரோடு ஷோ - புகைப்படங்கள்

கர்நாடகத்தில் வரும், 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், மோடி அலையை உருவாக்க, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அதி தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

DIN
பிரதமர் மோடி மீது பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்ற பொதுமக்கள்.
பிரச்சாரத்தின் போது மோடி எழுப்பிய, பாரத் மாதா கீ ஜெய், ஜெய் பஜ்ரங் பலி ஆகிய கோஷங்களை ஒலிபெருக்கி மூலம் வழிநெடுக ஒலிக்க செய்த‌னர்.
சுமார் 26 கிமீ தூரம் திறந்த வாகனத்தில் நின்றவாறு பயணித்து 13 சட்டப்பேரவைத் தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
கர்நாடக தேர்தல் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், ஆளும் பாஜக, காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
பாஜக தொண்டர்கள் பலர், மோடியின் முகமூடி அணிந்தும், ஹனுமான் வேடமணிந்தும் பேரணியில் பங்கேற்றனர்.
மோடியை வரவேற்கும் விதமாக சாலையின் இரு புறங்களிலும் நின்றிருந்து மக்கள் 'மோடி', 'மோடி' என வழிநெடுக கோஷம் எழுப்பினர்.
பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் மோடி நேற்று திறந்த வாகனத்தில் தொகுதிகளில் ஊர்வலம் சென்றார்.
பெங்களூரில் மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் மோடி நேற்று திறந்த வாகனத்தில் தொகுதிகளில் ஊர்வலம் சென்றார்.
நாளையுடன் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT