அமெரிக்காவின் 47-வது அதிபராக நாளை (திங்கட்கிழமை) பதவியேற்க உள்ள டிரம்ப் மற்றும் அரவது மனைவி மெலனியா டிரம்ப். அதிபராகப் டிரம்ப் பதவியேற்கும் சூழலில், இன்று முதல் டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் கொண்டாட்டங்கள் களைகட்டியது.
வாணவேடிக்கைகளைப் பார்த்தவாறு நடனமாடிய டிரம்ப். டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.வாணவேடிக்கைகளைப் பார்த்து ரசிக்கும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்.வாஷிங்டன் டி.சி.யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பதவியேற்பு முந்தைய இரவு விருந்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீதா அம்பானி ஆகியோருடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்.பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் ஓவியத்தை இறுதி வடிவம் தரும் கலைஞர் ஒருவர்.நாளைய தினம் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் 47ஆவது அதிபராகப் பதவியேற்கிறார் டிரம்ப்.