அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று (திங்கள்கிழமை - ஜனவரி 20) இரவு 10.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்.அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே. டி. வான்ஸ்.பதவியேற்பு விழாவில், முன்னாள் அதிபர் ஜோ பைடன், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, கிளின்டன், இத்தாலி அதிபர் மேலோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.அமெரிக்க வரலாற்றில் அதிபராக இருந்து தோல்வியடைந்து, அதற்கு அடுத்த தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்றிருப்பது 200 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறையாகும்.முன்னாள் அதிபர் ஜோ பைடன், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே. டி. வான்ஸ் உள்ளிட்டோர்.முன்னாள் அதிபர் ஜோ பைடன் உடன் அதிபர் டொனால்ட் டிரம்ப்.முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் உடன் அவரது மனைவி லாரா புஷ்.விழாவில்
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்.