நண்பர்கள் மற்றும் உறவினர்கள் படைசூழ கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌசல் திருமணம் ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பர்வாராவில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
2003ஆம் ஆண்டு வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் கத்ரீனா கைஃப்.நடிகை கத்ரீனா, ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.மெஹந்தி நிகழ்ச்சியிலும் இரு தரப்பு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர்.திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.விக்கி கவுசலை கடந்த 2019ஆம் ஆண்டு முதலே காதலித்து வந்துள்ளார் கேத்ரீனா கைஃப்.விக்கி கவுசல் மற்றும் கேத்ரீனா ஆகியோர் தங்கள் திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.