நடிகர் அசோக் செல்வன் - நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் கோலாகலமாக நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம்.கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகரும், இயக்குநருமான அருண் பாண்டியனின் மகள் ஆவார்.திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால், வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிறகு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.