காளிதாஸ் ஜெயராம் - தாரிணி காலிங்கராயர் இருவருக்கும் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காளிதாஸ் தாரிணியை காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.தாரிணி மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா முதல் ரன்னர் அப் ஆகிய பட்டங்களையும் வென்றுள்ளார்.பிரபலங்கள் கலந்து கொண்டு காளிதாஸ் - தாரிணி தம்பதிகளை வாழ்த்தினர்.பார்வதி - ஜெயராம் தம்பதியினர்.