டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 187/8 ரன்களை குவித்தது. இறுதியில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 3 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 32 ரன்களை குவித்து அவுட்டாகாமல் இருந்தார். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 187 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 181/5 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தனது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்.