விளையாட்டு

தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த நீரஜ் சோப்ரா - புகைப்படங்கள்

DIN
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழாவில் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழாவில் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா.
தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
ஒலிம்பிக்கில் இந்தியா புதிய சரித்திரம் படைத்துள்ளது.
6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா.
தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார்.
இறுதிச் சுற்றில் பிற நாட்டின் வீரர்கள் நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான சவால் அளித்தனர்.
நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீட்டரும், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டரும், மூன்றாம் சுற்றில் 76.79 மீட்டரும் ஈட்டி வீசினார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளதன் மூலம் இந்தியா பதக்கப் பட்டியலில் முன்னேறியிருக்கிறது.
நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 48வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
2017ல் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நீரஜ் சோப்ரா 23 வயதானவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT