செண்டை மேளம் முழங்க நடராஜனுக்கு கிராம மக்கள் வரவேற்பு - புகைப்படங்கள்
தனது சொந்த கிராமத்தில் பொதுமக்கள் செண்டை மேளம் முழங்க, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று நடராஜன் கெளரவிப்பு.
சொந்த ஊர் திரும்பிய தமிழக வீரர் நடராஜனுக்கு கிராம மக்கள் அளித்த உற்சாக வரவேற்பு.
தனது கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தவர் நடராஜன்.
தொடரட்டும் நடராஜனின் இந்த சாதனைப் பயணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2017ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 3 கோடிக்கு ஏலம் எடுத்தது.
நடராஜன் 2019ஆம் ஆண்டு இவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நகர்ந்தார்.
நடராஜன் தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.