ரச்சின் ரவீந்திராவின் விக்கெட்டைக் கைப்பற்றிய பிறகு, மகிழ்ச்சியில் வலம் வரும் ஷுப்மன் கில் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர். ANI
இந்தியா அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி குரூப் ஏ பிரில் முதல் இடத்தைப் உறுதி செய்து அரையிறுதிக்கு முன்னேறியது.இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் போது ரன்களை குவிக்கும் ரவீந்திர ஜடேஜா.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பந்தை விளாசிய ஹர்திக் பாண்டியா.பந்தை பிடிக்க முயலும் கேப்டன் ரோஹித் சர்மா.முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது.இந்திய அணியின் வெற்றியின் மூலம், மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 28, வில் யங் 22, டேரில் மிட்செல் 17, டாம் லாதம் 14, கிளென் பிலிப்ஸ் 12, ரச்சின் ரவீந்திர 6, மைக்கேல் பிரேஸ்வெல் 2 ரன்கள் எடுத்தனர்.