6.4.1976: மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் வரும்
மாத வருமானம் ரூ. 200க்குக் கீழ் உள்ளவர்களுக்கு கடன் நிவாரண சட்டம் பற்றி...
சென்னை, ஏப். 5 - மாத வருமானம் இருநூறு ரூபாய் அதற்குக் குறைவான வருமானமுள்ளவர்கள் வாங்கியுள்ள கடன், வட்டி ஆகியவற்றை அறவே ரத்து செய்து, கடன் தொல்லையிலிருந்து குறைந்த வருமானக்காரர்களை மீட்கும் வகையில் தமிழக அரசு சட்டமியற்ற உத்தேசித்துள்ளது. விரைவில் இந்தச் சட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
ஆண்டு வருமானம் இரண்டாயிரத்து நானூறு ரூபாயும், அதற்குக் குறைந்த அளவும் வருமானமுள்ள கிராமவாசிகள், நகர்ப்புற ஏழை மக்கள் ஆகியோர் கடன்பட்டுள்ள தொகை செலுத்த வேண்டிய வட்டி ஆகியவற்றை ரத்து செய்து, மக்களைக் கடன் ஏழை தொல்லையிலிருந்து விடுவிப்பது என்ற நோக்கத்துடன் சட்டம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் லேவாதேவிக்காரர்களிடம் அடமானமாக வைத்திருந்த நகைகளை அல்லது அந்தக் கடன் தொகைகளை ரத்து செய்து இதர உடமைகளை திருப்பக் கொடுக்கச் செய்வது இன்னொரு நோக்கமாகும்.
இதற்கிடையில் கிராமப்பகுதிகளில் வாழும் விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புறங்களில் வாழும் இதர தொழிலாள மக்கள் வாங்கியிருந்த கடன்களை வசூலிப்பதிலிருந்து நிவாரணமளிக்கும் சட்டம் ஏப்ரல் மாதம் 18-ம் தேதியுடன் காலாவதியாகிறது. இதை மேலும் நீடித்து, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒத்திவைக்க அரசு சட்டம் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்படுகிறது.
Advertisement
Advertisement
வட்டி வேண்டாம்
"அடமானப் பொருட்களுக்கு ஈட்டின்மீது கொடுத்த பணத்திற்கு வட்டி வேண்டாம். அசலைக் கொடுத்தால் போதும். பண்டங்களை திருப்பிக் கொடுத்துவிட்டு லேவாதேவித் தொழிலிலிருந்தே விலகிக்கொள்கிறோம்" என்று அரசுக்கு வேவாதேவிக்காரர்களிடமிருந்து பல முறையீடுகள் வந்துள்ளன. ...
காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய கும்பாபிஷேகம்: பல லட்சம் மக்கள் தரிசித்தனர்
சென்னை, ஏப். 5- முத்தித் தலங்கள் எழில் ஒன்றாகத் திகழும் காஞ்சியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் ஸ்தாபித்த ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் இன்று காலை மிகச் சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மறையொலி முழங்க மங்கல முழவு அதிர, சரியாக காலை 6-15 மணிக்கு நடைபெற்ற கும்பாபிஷேகத்தை, உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் வந்திருந்த லட்சக் கணக்கான மக்கள் கண்டு, தரிசித்து ஸ்ரீ அம்பாளின் அருட்கடாட்சத்தைப் பெற்றனர்.
ஸ்ரீ ஆதிசங்கரர் பரம்பரையில் சோதியெனத் திகழும் நடமாடும் தெய்வம் பெரியவாள் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளாசியுடன், ஸ்ரீ ஐயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
April 6, 1976: A Debt Relief Act will be introduced for those with a monthly income of less than Rs. 200.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.