FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

10.4.1976: அரிசி நடமாட்ட கட்டுப்பாடு நீடிக்கும்

அரிசி நடமாட்ட கட்டுப்பாடு நீடிக்கும் எனத் தகவல்...

10.4.1976 - Dinamani
பகிர்:

ஹைதராபாத், ஏப். 9- தென்னிந்தியாவில் அரிசி நடமாட்டம் மீது தற்போது இருந்து வரும் கட்டுப்பாடுகள் அப்படியே நீடிக்க வேண்டுமென்று மத்ய சாக்கார் கருதுகிறது.

இந்த முடிவை அது சமீபத்தில் ஆந்திர சர்க்காருக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

இந்த வருஷம் அமோகமாக நெல் விளைச்சல் இருப்பதால், நடமாட்டக் கட்டுப்பாடுகள் பற்றி மறு பரீசீலனை செய்யுமாறு ஆந்திர சர்க்கார் மத்திய சர்க்காரைக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கோரிக்கையின் மீதே மத்ய சர்க்கார் மேற்கண்டவாறு முடிவு எடுத்திருக்கிறது.

Advertisement

Advertisement

அரிசி விலை குறைந்திருப்பதால் நெல் சாகுபடி லாபகரமற்றதாகிவிட்டது என்றும், இதனால் சில ஜில்லாக்களில் இரண்டாவது போக சாகுபடி பரப்பு குறைந்திருப்பதாகவும் ஆந்திர சர்க்கார் தெரிவித்திருந்தது. மண்டல ஏற்பாட்டை ரத்து செய்துவிட்டு நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் நீக்கிவிட்டால் விலைவாசி ஸ்திரமடையத் தொடங்கும் என்றும், விவசாயிகள் வேறு பயிர்களுக்கு மாறாமல் இருப்பார்கள் என்றும் அது கூறியது. ...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்படும்

நெய்வேலி, ஏப். 9- நெய்வேலி சுரங்கத்திற்குத் தேவையான, சுமார் ரூ. 8.7 கோடி விலையுள்ள யந்திரங்களை வாங்குவதற்கு சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய விசைத் துறை அமைச்சர் கே.சி. பந்த் இன்று நெய்வேலியில் தெரிவித்தார்.

இந்த யந்திரங்கள் மூலம் நிலக்கரி உற்பத்தி 65 லட்சம் டன்களாக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார். நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பொறியாளர் கழகம் ஏற்பாடுச் செய்துள்ள திறந்தவெளி சுரங்கங்கள் பற்றிய 3 நாள் கருத்தரங்கை பந்த் துவக்கி வைத்துப் பேசினார்.

இந்தியாவைப் பொருத்தமட்டில் இன்றைய நிலையில் எரிபொருள் துறையில் நிலக்கரி உற்பத்திக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுரங்கங்களை தேசீய மயமாக்கிய பின் 2 ஆண்டுகளுக்குள்ளாக நிலக்கரி உற்பத்தி 7.8 கோடி டன்களிலிருந்து 10 கோடி டன்களாக அதிகரித்துள்ளது. திறந்த வெளி சுரங்கங்களிருந்து கிடைக்கின்ற நீலக்கரி 5-வது ஐந்தாண்டு திட்ட இறுதியில் 3.7 கோடி டன்களாகவும், 6-வது திட்ட இறுதியில் 8.5 கோடிடன்களாகவும் உயரக் கூடும். அடுப்புக்கரி உண்மையிலேயே ஏழையின் எரிபொருளாக மாறுவதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவை உருவாக்க வேண்டிய அவசியத்தையும் சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பு வேலை முறைகளை முன்னேற்ற வேண்டிய தேவையையும் அமைச்சர் வலியுறுத்தினார். உற்பத்தியை அதிகரிப்பதற்காக யந்திரகளின் மயமாக்கும்போது அதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக் கூடிய அபாயத்தையும் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். ...

summary

10.4.1976: Rice Movement Controls Continue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments