முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

6.2.1976: பத்திரிகை செய்தி தணிக்கை - எல்லா ஜில்லா மாஜிஸ்டிரேட்டுகளுக்கும் அதிகாரம்

பத்திரிகை செய்தி தணிக்கை அதிகாரிகளாக ஜில்லா மாஜிஸ்டிரேட்டுகள் நியமிக்கப்பட்டது பற்றி...

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 10:36 PM
6.2.1976
பகிர்:

சென்னை, பிப். 5 - தமிழ்நாட்டிலுள்ள எல்லா ஜில்லா மாஜிஸ்டிரேட்டுகளும் பத்திரிக்கை தணிக்கை அதிகாரிகளாகப் பணியாற்றுவார்கள் என்று சர்க்கார் கெஜட் அறிக்கையொன்று கூறுகிறது.

ஆட்சேபகரமான பிரசுரங்கள் பற்றிய அவசர சட்டத்தை அமல் நடத்தும் அதிகாரிகளாக இவர்கள் பணியாற்றுவார்கள்.

குவாடிமாலா பூகம்ப சாவு 2000 ஆகியது

குவாடிமாலா சிடி, பிப். 5 - மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா குவாடிமாலாவை ஊடுருவிய பூகம்பத்தில் குவாடிமாலாவில் மட்டும் 2000 பேருக்குமேல் மடிந்தனர். காலைவரையில் ஆயிரம் பேர் மடிந்ததாகத் தெரிய வந்ததென செய்திகள் கூறின.

பூகம்பத்தில் 3000 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர். பூகம்பத்தில் தவிக்கும் மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கான பொருள்கள் இன்று விமானங்களில் வந்து சேர்ந்தன.

அவசரநிலை பிரகடனம்

குவாடிமாலா அரசாங்கம் பொதுத் துன்ப நிலை. அவசர நிலைப் பிரகடனம் செய்தது. நிவாரணப் பணிக்குழு அதிகாரிகள் ரத்தம், மருந்துகள் வகையறாக்களை உதவுமாறு வேண்டுகோள் வெளியிட்டனர்.

பூகம்பம் மெக்ஸிகோ சிடியிலிருந்து ஆரம்பித்து தெற்கில் குவாடிமாலாவின் மையத்தில் ஊடுருவிப்புகுந்து, ஹோண்டூராஸிலும், எல் ஸால் 'வடார் மூலம் 3200 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்றது. நேற்று காலை விடிவதற்கு முன்னமே இக்கோரம் நிகழ்ந்துவிட்டது.

குவாடிமாலா அதிபர் யூஜினோ லாகிரூத் நேற்றிரவு ரேடியோவில் பேசினார். நடுப்பகலுக்குள் 800 சடலங்கள் சர்க்காரால் எண்ணப்பட்டன. ஆனால் சாவுத் தொகை 2000 பேருக்கு மேல் இருக்குமென்று பின்பு அதிகாரிகள் மதிப்பிட்டனர்: லாகூரில் என்ற சிறு நகரில் மட்டும் 400 பேர் மாண்டனர் என்று அதிபர் தெரிவித்தார்.

அவசர மீட்புக் குழுத் தலைவர் கர்னல் ஏஞ்சல் 2000 என்பது மிதமான மதிப்பீடு என்றார். இன்னும் அதிகமான அளவுக்குச் சாவு இருக்கலாம் என்றார்.

summary

6.2.1976: Press censorship – Authority granted to all District Magistrates.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.