10.2.1976: மவுண்ட் ரோடு டெலிபோன் தொடர்பகம் ஏப்ரல் மத்தியில் இயங்கும்
மவுண்ட் ரோடு டெலிபோன் தொடர்பகம் பற்றி...
சென்னை, பிப். 9 - மவுண்ட் ரோடு டெலிபோன் தொடர்பகம் (எக்ஸ்சேஞ்ஜ்) ஏப்ரல் மத்தியிலிருந்து செயல்படத் தொடங்கும்.
டெலிபோன்களுக்காக விண்ணப்பித்து பிப்ரவரி 15ந் தேதிக்குள் டிபாசிட்டுகளைச் செலுத்தியிருப்பவர்கள் எல்லோருக்கும் மே மாத இறுதிக்குள் கனெக்ஷன் கிடைக்கும்.
2500 பேர் டெலிபோன்கள் கேட்டு காத்திருக்கிறார்கள். மே இறுதிக்குள் அவர்களுக்கு டெலிபோன் தொடர்புகள் கிடைக்கும்.
Advertisement
Advertisement
சென்னை - கல்கத்தா எஸ்.டி.டி. (டெலிபோன் வைத்திருப்பவர் நேரடியாக டிரங்கில் பேசுதல்) விரைவில் பொது மக்களுக்கு அனுமதிக்கப்படும்.
நேரடியாக டிரங்க் டெலிபோன் பேசுதல் தமிழ்நாட்டில் விரைவில் எளிதாக்கப்படும். சென்னை - திருப்பதி, கோயமுத்தூர்- உடுமலைப்பேட்டை, மதுரை - விருதுநகர், ஈரோடு - சேலம், ஈரோடு - கோயமுத்தூர், மதுரை- கோயமுத்தூர், பாலக்காடு - கோயமுத்தூர், கோயமுத்தூர் - திருப்பதி, திருச்சி - பெங்களூர் ஆகிய லைன்களில் நேரடி டெலிபோன் முறையைக் கொண்டு வரமுடியமென்று தபால், தந்தி இலாகா எதிர்பார்க்கிறது.
தென்னாட்டில் டெலக்ஸ் தொடர்புகள் விரிவுபடுத்தட்படுகின்றன. சென்னை தொடர்பகத்துக்கு அடுத்த 3 மாதங்களில் மேலும் 200 டெலெக்ஸ் லைன்கள் கிடைக்கும். சேலத்துக்கு 50ம், தூத்துக்குடி, பாண்டிச்சேரி, கரூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் ஒவ்வொன்றுக்கும் தலா 20ம் ஈரோடுக்கு 50ம் கிடைக்கும்.
குவாடிமாலாவில் மூன்றாம் தடவை பூகம்பம்
குவாடிமாலா நகரம், பிப். 7 - குவாடிமாலாவில் மூன்றாவது தடவையாக இன்று பூகம்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக நகரில் பல கட்டிடங்கள் ஆடின. இங்குமங்குமாக சேதம் ஏற்பட்டது.
புதன்கிழமை முதல் தடவையாக பூகம்பம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை 7,377 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகார தகவல்கள் கூறுகின்றன.
இன்றைய பூகம்பத்தின் விளைவாக குவாடிமாலா நகரில் ஓர் ஆஸ்பத்திரி கட்டிடம் பலத்த சேதம் அடைந்தது. நோயாளிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். எனினும் பல நோயாளிகள் பீதி காரணமாக ஆஸ்பத்திரியிலிருந்து பயந்து ஓடினர்.
10.2.1976: The Mount Road telephone exchange will be operational by mid-April.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.