FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

16.9.1976: தமிழ் நாட்டிற்கு அதிக நீர்: கர்நாடகத்திடம் எடுத்துரைக்க பிரதமர் உறுதிமொழி

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

15 செப்டம்பர் 2026, 10:47 am IST
16.9.1976 - Dinamani
பகிர்:

மதுரை, செப். 15- மேட்டூர் அணைக்குக் கூடுதலான காவிரி நீரை விடும்படி கர்நாடக அரசிடம் எடுத்துரைப்பதாக பிரதமர் இந்திரா காந்தி உறுதி அளித்துள்ளதாக நம்பப்படுகிறது.

தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் தூதுக்குழுவொன்று, இந்த கமிட்டியின் தலைவர் துளசி ஐயா வாண்டையார் தலைமையில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து ஒரு மகஜர் சமர்ப்பித்தது. காவிரி, வெண்ணாறு நதிகளில் போதிய அளவு நீர்சப்ளை ஆகாததாலும் கல்லணைக் கால்வாய்ப் பகுதி, வடவாறு விரிவாக்கக் கால்வாய்ப் பகுதி ஆகியவற்றுக்கு தண்ணீர் விடப்படாததாலும், தஞ்சை மாவட்ட விவசாயிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பதாக, இந்தத் தூதுக் குழுவினர் முறையிட்டனர்.

கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து தண்ணீர் விடப்படாததாலும், கபினி அணையிலிருந்து மிகவும் குறைந்த அளவு தண்ணீரே விடப்பட்டதாலுமே மேட்டூர் நீர் மட்டம் அணையில் மிகவும் குறைவாக உள்ளது என்றும் அந்த தூதுக் குழு கூறியது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே உள்ள 1924-ம் ஆண்டின் உடன்பாட்டின்படி தமிழ்நாட்டு ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து இந்நேரத்திற்குள் தண்ணீரை விட்டிருக்க வேண்டும் இருப்பினும், இது தண்ணீர் பற்றாக்குறை காலமாதலால், காவிரி நதி நீரை இந்த இரு மாநிலங்ளின் நலனுக்கும் குந்தகம் ஏற்படாத வகையில் பகிர்ந்து கொள்வது அவசியமாகும். ...

உபரிநீர்: பிரதம மந்திரி யோசனை - தென்மாநில முதல்வர்கள் கலந்து பேசி தீர்வு காணக் கோருகிறார்

சிவகங்கை, செப் 15:- தமிழ்நாட்டுக்கு தங்களிடமுள்ள உபரி நீரை வழங்குமாறு அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு எடுத்துரைக்கும். தமிழ்நாடு அம்மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கலாம். இம்மாநிலங்களின் முதல் மந்திரிகள் ஒன்றாக அமர்ந்து தங்கள் மாநிலங்களின் பரஸ்பர நலன்களுக்கேற்ற வகையில் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயல வேண்டும் என்று பிரதம மந்திரி இந்திரா காந்தி இன்று இங்கு பொதுக் கூட்டத்தில கூறினார்.

மாநில சுயாட்சி போன்ற கோரிக்கைகள் தான் மற்ற மாநிலங்களிடமிருந்து தமிழ்நாட்டுக்கு உதவி கிடைப்பதற்கு தடையாக இருந்ததென்று சொல்லிக் கொண்டு வந்த பிரதமர் சடுக்கென அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டுக்கு உபரி நீரை வழங்கும்படி செய்ய மத்திய அரசாங்கம் முயலுமென்று அறிவித்தார்.

தம்மிடம் பல்வேறு நிறுவனங்கள் தந்த மகஜர்களைப் பற்றி குறிப்பிட்டு பிரதம மந்திரி பேசினார். மற்ற மாநிலங்களிலிருந்து ஆறுகளின் நீரைத் திருப்பிவிடுவது, உபரி நீரைக் கொண்டு வருவது சம்பந்தமான மகஜர்கள் அவை என்று கூறினார்.

துரதிருஷ்டவசமாக முந்தின மாநில அரசு சுயாட்சி கோரிக்கையை வற்புறுத்திய தென்று குறிப்பிட்டு இவ்வித மிருக்க எவ்விதம் தண்ணிரைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிற மாநிலங்களை கேட்டுக் கொள்ள முடியுமென்றும், இது தான் தர்மசங்கடமான தென்றும் கூறினார். ...

summary

More water for Tamil Nadu: Prime Minister pledges to take up the matter with Karnataka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments