6.9.1976: த.நா. நகரங்களின் அபிவிருத்திக்கு ஆணை அமைப்பு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
சென்னை, செப். 5 - தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட ஜனத்தொகையைக் கொண்ட நகரங்களின் அபிவிருத்திக்கென அபிவிருத்தி ஆணை அமைப்பு ஏற்படுத்தப்பட்டு பெரும் போக்குத் திட்டம் தயாரிக்கப்படும் என்று மத்திய பொதுப்பணி ஜாகை வசதி துணை மந்திரி எச். கே. எல். பகத் இன்று அறிவித்தார்.
சென்னையில் கவர்னர் மாளிகையில் அவர் தமிழ்நாட்டில் வீட்டுமனை ஒதுக்கீடுகள், 'நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் வீடுகளைக் கட்டுதல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்பற்றி கவர்னரின் ஆலோசகரான ஆர். வி. சுப்ரமண்யத்துடனும் மற்றும் வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியங்கள், குடிநீர் வடிகால் வாரியம், பாசனத்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர ஆணை அமைப்பு ஆகியவற்றின் சீனியர் அதிகாரிகளுடனும் விவாதித்தார். பின்னர், அவர் நிருபர்களுடன் பேசுகையி ல் மேற்கூறிய தகவலை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற அபிவிருத்திக்கென கடந்த காலத்தில் பிராநதியத் திட்டங்கள் இருந்தன . இப்போது இம்மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் அபிவிருத்தி ஆணை அமைப்பைப் பெறும் என்றார் மந்திரி. ...
Advertisement
Advertisement
... சேரி அபிவிருத்தி
சேரிவாசிகளுக்கு மனைகளை ஒதுக்குவதன் மூலம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் பெரிய அளவில் சேரி அபிவிருத்திக் திட்டத்தை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசுக்கு யோசனை கூறியுள்ளதாகவும் மந்திரி தெரிவித்தார். சேரிகளை அகற்றுவது வேறு, சேரிகளை அபிவிருத்தி செய்வது வேறு. வசதிகள் செய்து கொடுக்கப்படுமானால் அது சேரி அபிவிருத்தியாகும் எனறார் அவர்.
சென்னை நகரில் 7 லட்சத்தும் மேற்பட்ட மக்கள் சேரிகளில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரச்னை அவசர அடிப்படையில் சமாளிக்கப்பட்டால் ஒழிய இதைத் தீர்க்க நீண்ட காலம் ஆகிவிடலாம் என்றும் மந்திரி பகத் குறிப்பிட்டார். ...
கல்வி முறையில் மாற்றம் அவசியம்: ஆசிரியர் தினத்தில் பிரதமர் வலியுறுத்தல்
புதுடில்லி, செப். 5 - அரசியல் சாஸனத்தில் ஒருங்கிணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கடமைகள், மக்களின் ஜீவாதாரச் சிந்தனையையும் போக்கையும் மாற்றவும் ஒரு சமாதானப் புரட்சியை ஏற்படுத்தவும் உதவும் என்று பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்தி இன்று கூறினார்.
உலகில் பல நாடுகளின் அரசியலமைப்புகளில் ஜீவாதாரக் கடமைகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் மக்களுடைய உரிமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடமைகளைச் செய்தால் உரிமைகள் தாமாகவே கிடைக்கின்றன என்று மகாத்மாகாந்தி வலியுறுத்திக் கூறிவந்தார் என்றும் பிரதமர் கூறினார்.
இங்கு ஆசிரியர்கள் தின மகாநாட்டையொட்டி ஆசிரியர்களும் கல்வி நிபுணர்களும் திரளாகக் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் பேசினார். ...
6.9.1976: Authority for the development of towns in Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.