3.9.1976: அரசியல் சட்டத் திருத்தங்கள் நோக்கம் பற்றி பிரதமர்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
புது டில்லி, செப். 2- மக்களின் பெருகி வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதே, அரசியல் சட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ள திருத்தங்களின் நோக்கமாகும் என்று பிரதமர் இந்திரா காந்தி இன்று கூறினார்.
பார்லிமெண்ட் கூட்டத்தொடரின் இறுதியில் இன்று காங்கிரஸ் பார்லிமெண்டரி கட்சியின் பொது சபை கூட்டத்தில் அவர் பேசினார்.
எழுத்து மூலமாக உள்ள அரசியல் சட்டங்களில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். சமூகமும், பொருளாதார நிலைமைகளும் மாறும்போது, சட்டத்தில் அவசியமான திருத்தங்களை செய்வது அவசியமாகிறது என்றார் பிரதமர். அரசியல்
Advertisement
Advertisement
குறிக்கோள்களை அடைவதற்கு இடையூறாக உள்ளவற்றை அகற்றுவதற்காகவும், மக்களின் பெருகி வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும். அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டியதன் அவசியம் என்பதை தேர்தல்சமயத்திலேயே கூட நாம் குறிப்பிட்டிருக்கிறோம் என்றார்.
சில சந்தர்ப்பங்களில் அரசியல் சட்டம் தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, அதைத் தெட்டத் தெளிவாக விளக்க வேண்டியுள்ளது. அதனால் தான் இந்தத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன என்று பிரதமர் கூறினார்.
திருத்தங்கள் பற்றி விவாதிப்பதற்காக எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன என்றார்.
நாட்டுக்குள் எதிர்க்கட்சிகளுடனும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை விஷயத்தில் மற்ற நாடுகளுடனும், சௌஜன்ய உணர்வுடன் பேச்சுவார்த்தை நடத்த சர்க்கார் முயன்று வந்திருக்கிறது என்றும் அவர் சொன்னார். ...
வைக்கிங்-2 செவ்வாயில் இன்று இறங்கும்
பாஸடேனா, செப். 2 - இரண்டாவது வைக்கிங் செயற்கைக்கோள் நாளைய தினம் இரவு சுமார் 11 மணிக்கு (இந்தியாவில் சனிக்கிழமை விடியற்காலை 4.30 மணி) செவ்வாயில் உடோபியா பிளானிடியா என்ற இடத்தில் இறங்கும். வைக்கிங் பழுதின்றி இறங்குமென்று விண்வெளிக் கோள் கட்டுப்பாடு நிலைய அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
இறங்குமிடம் சம தரையாக உள்ளது. 10 மீட்டர் முதல் 25 மீட்டர் வரை கனமான தரை பெரும் பாறைகளை மூடிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது என்று கூறினர். வெப்ப தட்பநிலை ஒத்து வராவிடில் செயற்கைக் கோள் இறங்குவது ஒத்திவைக்கப்படலா மென்றும் சொன்னார்கள். வைக்கிங் இப்போது சகஜமாக விண் வலம் வந்து கொண்டிருக்கிறது.
3.9.1976: Prime Minister on the objective of constitutional amendments.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.