17.9.1976: நடுவானில் சம்பவம் - விமானியையும் பிரயாணியையும் தாக்கி கடலில் குதித்த தம்பதி
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.
டோக்கியோ, செப். 16 - இயற்கை காட்சிகளைக்காணும் விமானமொன்றில் பிரயாணம் செய்த வயோதிக கணவனும், மனைவியும் நேற்று நடு வானில் விமானியையும், சக பிரயாணி ஒருவரையும் தாக்கிவிட்டு, விமானத்திலிருந்து 500 மீட்டர் கீழே பசிபிக்கடலில் குதித்து விட்டனர்.
காயமடைந்த பிரயாணி தகுதியற்ற விமானியாக இல்லாவிடினும், மயக்கமடைந்திருந்த விமானியிடமிருந்து விமான கண்ட்ரோல்களை தான் மேற்கொண்டு, 30 நிமிட நேரத்தில் டோக்கியோ சர்வதேச விமான நிலையத்தில் விமானத்தைப் பத்திரமாக இறக்கினார்.
டோக்கியோவுக்கும் ஒஷிமா தீவுக்குமிடையே கடலில் தம்பதிகளின் சடலங்களை போலீஸ் ரோந்து படகுகள் தேடின. ஆனால் சடலங்கள் கிடைக்கவில்லை.
Advertisement
Advertisement
விமானம் இறங்கியதும் டோக்கியோ போலீஸார் ரத்தம் தேய்ந்த சுத்தி ஒன்றையும், இரு சிறு பேனாகத்திகளையும் விமானத்தில் மூட்டைகள் போடுமிடத்தில் கண்டெடுத்தனர்.
விமானியின் நிலை கவலைக்கிடம் என்று கூறப்பட்டது. வயோதிக தம்பதியால் தாக்கப்பட்ட சக பிரயாணி 35 வயது புகைப்படக்காரர். அவர் நிலைமை அவ்வளவு கவலைக்கிடமாக இல்லை. "வயோதிகருக்கு மரியாதை" தினத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
முன்னாள் கணவர் (68வயது) கல்லூரி முதல்வர் என்றும், அவரது மனைவி (58 வயது) பிஜிசாவா நகரைச் சேர்ந்தவர் என்றும் விமான பயணத்துக்குமுன் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர்.
சோயுஸ் 22 விண்வெளி கப்பல் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தது
மாஸ்கோ, செப்: 16- விண்வெளியில் ரஷியாவின் சோயுஸ் 22 விண்வெளிக் கப்பலில் உள்ள இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் தங்களது முதலாவது அலுவல் தினமாகிய இன்று கிழக்கு சைபீரியாவை புகைப்படங்கள் பிடித்தார்கள்.
ரஷியாவிலும், கிழக்கு ஜெர்மனியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை புகைப்படங்கள் எடுக்கும் பணி நேற்று துவங்கியது. இந்தப் பகுதிகளின் நிலவியல் குணாம்சங்கள் பற்றி முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக இந்தப் பகுதிகளை புகைப்படம் பிடிப்பது சோயுஸ்-22 விண்வெளிக் கப்பலின் முக்கிய பணி ஆகும்.
ரஷியாவிலும், கிழக்கு ஜெர்மனியும் உருவாக்கி, கிழக்கு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பெரிய புகைப்பட காமிரா சோயுஸ் - 22 விண்வெளிக் கப்பலில் உள்ளது. உலகின் மேற்பரப்பை இந்த காமிரா புகைப்படம் எடுக்கிறது. ...
17.9.1976: Mid-air incident – Couple attacked pilot and passenger, then jumped into the sea.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.