பாட்னா, ஜன. 13 - பீகாரில் ஒரு மாத காலத்தில் கடுங்குளிருக்குப் பலியானோரின் எண்ணிக்கை 108 ஆகியது.
மோகாமேபரெளனி தொழிற்சாலைப் பகுதியில் 19 பேர் இறந்ததையடுத்து எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்தது.
நியூயார்க், ஜன. 12 - ஐக்கிய நாடுகள் சங்கத் தலைமையகக் கட்டிடம் அருகே 3 வெடிகுண்டுகளை, பாதுகாப்பு ஊழியர்கள் இன்று கண்டுபிடித்தனர்.
ஐக்கிய நாடுகள் சங்க பந்தோபஸ்து சபை கூட்டம் துவங்குவதற்கு 1 மணி நேரம் முன்பாக, இந்தக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சங்க வாயிலில் உள்ள பாதையும், நியூயார்க் நகர சுரங்கப்பாதைகளும் சந்திக்கும் இடத்தில், இந்த குண்டுகள் இருந்ததை, பாதுகாப்பு ஊழியர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் இந்தக் குண்டுகளை அழித்தனர்.
இந்தக் குண்டுகள் வெடித்தால் சேதம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில், ஐ.நா. நூலகக் கட்டிடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.