முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

17.3.1976: ரயில் பயணிகளுக்காக சென்ட்ரல், எழும்பூரிலிருந்து தனி பஸ்கள்

ரயில் பயணிகளுக்காக சென்ட்ரல், எழும்பூரிலிருந்து தனி பஸ்கள் இயக்கப்படுவது பற்றி...

Updated On : 17 மார்ச், 2026 at 4:00 AM
17.3.1976
பகிர்:

சென்னை, மார்ச். 10 - ரயிலில் வந்து இறங்கும் பிரயாணிகளின் நன்மைக்காக சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விசேஷ பஸ்கள் விடப்படும்.

முதலில் பரீட்சார்த்த முறையில் இந்தத் திட்டம் வியாழன் முதல் அமாலக்கப்படுகிறது. தினசரி காலை 5 மணிமுதல் 7 மணி வரையில் இந்த பஸ்கள் விடப்படும்.

இந்தப் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் அனைவருக்கும் ஒரேமாதிரியான கட்டணமாக தலா ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். இவர்கள் வைத்துள்ள பெட்டி, படுக்கைகளுக்கு ஒரு சாமானுக்கு 50 காசுகள் வீதம் ”லக்கேஜ் கட்டணம்" வசூலிக்கப்படும்.

Advertisement

இந்த பஸ்கள் நகரின் முக்கிய இடங்களுக்குச் செல்லும். இடை வழியில் முக்யமான 2 அல்லது 3 இடங்களிலேயே நிற்கும்.

இத்தகவல்களை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளர் ஆர். பசுபதி, பல்லவன் போக்குவரத்துக் கழக நிர்வாக டைரக்டர் சி.ஏ. ஸ்ரீநிவாசன் ஆகியோர் செவ்வாயன்று நிருபர்களிடம் தெரிவித்தார். டாக்சி, ஆட்டோ கட்டணங்களைச் சமாளிக்க முடியாத பயணிகளின் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் சொன்னார்கள். ...

பிரதமர் வில்ஸன் திடீர் ராஜிநாமா

லண்டன், மார்ச். 16 - பிரிட்டிஷ் பிரதமர், வில்ஸன் இன்று திடீரென்று ராஜிநாமா செய்தார். 4 நாட்களுக்கு முன்புதான் அவர் பார்லிமெண்டில் நம்பிக்கை வாக்கு பெற்றார்.

வில்ஸனின் பரபரப்பான அறிவிப்பு அரசியல் வட்டாரங்களுக்கு முழு வியப்பளித்தது. அது தொழிற் கட்சி ஆளும் கட்சியாக நீடிக்குமா என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியது. விரைவில் பொதுத் தேர்தல் நடக்கக்கூடும் என்ற ஹேஷ்யத்தையும் அது தோற்றுவித்தது.

தன் திடீர் முடிவுக்கு குறிப்பிட்ட காரணத்தை வில்ஸனின் அறிக்கை வெளியிடவில்லை. தன் முடிவை அவர் இன்று காலை சக மந்திரிகளிடமும் ராணி எலிஸபெத்திடமும் அவர் தெரிவித்தார்.

இன்று காலையில் பிரதம மந்திரி வில்ஸன், தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண்டு, மூன்று சகாக்களை அழைத்து, ராஜிநாமாவைப் பற்றி ஆலோசனை கலந்தார். பிறகு பக்கிங்ஹாம் அரண்மனைக்குக் கிளம்பிப் போனார். பிரதம மந்திரி பதவியிலிருந்து விலக உத்தேசித்திருப்பதாக எலிஜபெத் ராணியிடம் தெரிவித்தார்.

தொழிற் கட்சி ஒரு வாரத்துக்குள்ளாகக் கூடி புதுத் தலைகுவரை ஏறக்குறைய தேர்ந்தெடுக்கும். 30 ஆண்டுகளாக அரசியலில் இருந்த பின், வேறு ஒருவக்ருகு இடங்கொடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டதென்று வில்ஸன் கருதுகிறார்.

பார்லிமெண்டு தொழிற் கட்சி கூடி, புதுத் தலைவரைத் தேர்ந்தெடுத்ததும் அவரது ராஜிநாமா அமலுக்கு வரும்.

11உயன்று வில்ஸனுக்கு வயது 60 ஆகியது.

summary

Separate buses from Central and Egmore for train passengers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.