இதயக் கோளாறு என்றாலே அறுவைச் சிகிச்சைதான் தீர்வா?
மாரடைப்பு' (மயோகார்டியல் இன்ஃப்ராக்ஷன்) என்றாலே குடும்பத்தினரிடையே பயம், பரபரப்பு, பாதுகாப்பற்ற உணர்வு தொற்றிக் கொள்கின்றன. ஏனெனில் மாரடைப்பு என்பது உயிரை பறிக்கக்கூடியது. பொதுவாக இதற்கு அறுவைச் சிகி
மாரடைப்பு' (மயோகார்டியல் இன்ஃப்ராக்ஷன்) என்றாலே குடும்பத்தினரிடையே பயம், பரபரப்பு, பாதுகாப்பற்ற உணர்வு தொற்றிக் கொள்கின்றன. ஏனெனில் மாரடைப்பு என்பது உயிரை பறிக்கக்கூடியது. பொதுவாக இதற்கு அறுவைச் சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்ட்டி போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன. இந்த இரண்டு சிகிச்சை முறைகளிலும் நன்மை-தீமைகள் நிறைந்துள்ளன.
இதய பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு 6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகளுக்குள் மீண்டும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக நோயாளி குணமடைந்து விடுவாரா, வழக்கமான பணிகளைத் திரும்பத் தொடர முடியுமா, சிகிச்சைக்கு ஆகும் செலவுகளைத் தாங்க முடியுமா என்ற கேள்விகள் எழும். இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் இதுவரை இந்த நிலைதான்.
அறுவைச் சிகிச்சையின்றி...: இப்போது அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. அறுவைச் சிகிச்சையை விரும்பாத நோயாளிகளுக்கு, பல மருத்துவக் காரணங்களினால் அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு, அறுவைச் சிகிச்சை செய்தும் பலனளிக்காதவர்களுக்கு, இதயக் கோளாறு மற்றும் வலியுடன் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு அறுவைச் சிகிச்சையில்லாத ஒரு சிகிச்சை முறை சென்னையில் கிடைக்கிறது.
நவீன சிகிச்சை என்ன? 3D CCG ஆஞ்சியோகார்டோகிராம் மூலம் இதயத்தில் உள்ள அடைப்புகளை முழுமையாக வெளியிலிருந்தபடியே கண்டறிந்துவிட முடியும். கத்தியின்றி, ஊசியின்றி மேற்கொள்ளப்படும் சிகிச்சையான இதில் வாழ்க்கை முறை, உணவு முறை, மனஅழுத்தம் குறைப்பதற்கான பயிற்சி, மருந்துகள் வழங்கப்படுகின்றன. ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுகின்றன. ACT, , ஓசோன், EE CP போன்ற சிகிச்சை முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அறுவைச் சிகிச்சையின்றி பல்வேறு இதயக் கோளாறுகளையும் வெளியிலிருந்தே சீர் செய்துவிடலாம்.
அமெரிக்க அரசு EE CP சிகிச்சைக்கு காப்பீடு வழங்கியுள்ளது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் சிறப்புப் படிப்பை படித்துள்ள டாக்டர் அயாஸ் அக்பர், அமெரிக்க சுகாதார ஆய்வு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அறுவைச் சிகிச்சையில்லாத இந்தப் புதிய உஉஇட சிகிச்சை முறையை இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் அளித்து வருகிறார். சிடி, எம்ஆர்ஐ, டாப்ளர் போன்ற வசதிகள் கொண்ட ஆய்வுக்கூடத்துடன் சுமார் 50 ஆயிரம் சதுர அடிபரப்பில் இயங்கிவரும் அவரது ஆக்ஸிமெட் மருத்துவமனையில் ஆசிய, அரேபிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பல்வேறு துறை சிறப்பு மருத்துவர்களும் இங்கு உள்ளனர். பொதுவாக நான்கு மணி நேரம் 18 நாள்களுக்கு அல்லது மூன்று மணி நேரம் 35 நாள்களுக்கு இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது. இதய நோய் வராமலிருக்கவும் சிகிச்சை மேற்கொள்ளலாம். மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை. ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றுள்ள இந்த மருத்துவமனையில் கலைஞர் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் சிகிச்சை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு...
ஆக்ஸிமெட் மருத்துவமனை,
786, அண்ணாசாலை, நந்தனம்,
சென்னை-35.
தொ.பே: 044-42131010.