முகப்பு
தமிழ்நாடு

விஜய் வருகையால் பாதிப்பு இல்லை: 100% திமுக வெற்றி உறுதி - சபரீசன்

தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் போட்டியிடுவது தொடர்பாக சபரீசன் பேசியது குறித்து...

Updated On : 2 ஏப்ரல் 2026, 8:51 pm IST
செய்தியாளர் சந்திப்பில் சபரீசன் - ஏஎன்ஐ
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையால் எந்தவித பாதிப்பும் இல்லை; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி 100% உறுதியாகியுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இன்று (ஏப். 2) தெரிவித்தார்.

சென்னையில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக வில்லிவாக்கம் நலச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் சபரீசன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய சபரீசன்,

Advertisement

Advertisement

''நாங்கள் மிகச்சிறந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். புதிய கட்சியால் (தவெக) எவ்வித பாதிப்பும் இல்லை'' எனத் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ''அது அவரின் நம்பிக்கையின் அளவைக் காட்டுகிறது'' எனக் குறிப்பிட்டார்.

''நாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் மீண்டும் 100% வெற்றியை அளிக்கும். எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் வெற்றியை உறுதி செய்யும். திமுக கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது'' என சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து சேகர்பாபு பேசியதாவது:

''திமுக வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. இதைத் தடுக்கின்ற சக்தி யாருக்கும் இல்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வடசென்னை வளர்ச்சித் திட்டம் பெயரில் 60% பணிகள் நிறைவேற்றியுள்ளோம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி வந்தால்தான் வளர்ச்சி சாத்தியம் என்பதால் சென்னை தொகுதிகளில் திமுகவுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.