மருத்துவம்

மூட்டு வலி : ஹோமியோபதி உதவும்

மூட்டுகளில் வீக்கம், வலி, இறுக்கம் இருந்தால் அதை "ஆர்த்தரைட்டிஸ்' என்று கூறலாம். ஆண்-பெண் இரு பாலருக்கும் எந்த வயதிலும் வரும் மூட்டு நோய் பாதிப்பில்,  சுமார் 100 வகைகள் உள்ளன. காரணங்கள் என்ன? "ஆர்த்தர

டாக்டர் ஆர்.விஜய் ஆனந்த்

மூட்டுகளில் வீக்கம், வலி, இறுக்கம் இருந்தால் அதை "ஆர்த்தரைட்டிஸ்' என்று கூறலாம். ஆண்-பெண் இரு பாலருக்கும் எந்த வயதிலும் வரும் மூட்டு நோய் பாதிப்பில்,  சுமார் 100 வகைகள் உள்ளன.

காரணங்கள் என்ன? "ஆர்த்தரைட்டிஸ்' ஏற்பட பல காரணங்கள் உள்ளன. வைரஸ், பாக்டீரீயா, பூஞ்சாணத் தாக்குதல், நோயத் தொற்று, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி  குறைதல், சிலவகை வாதம், கீல்வாதம், குறுத்தெலும்பு தேய்மானம், அதிக உடல் பருமன், மூட்டுகளுக்கு அதிக உழைப்பு, மூட்டுகளில் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் முறையான  சிகிச்சை அளிக்காதது போன்றவற்றை முக்கியமாகக் கூறலாம்.

அறிகுறிகள் என்ன? மூட்டுக்களில் வலி, வீக்கம், மூட்டுகள் சிவந்து காணப்படுதல், சூடாக இருப்பது, மூட்டுகளில் இறுக்கம், மூட்டுக்களை அசைப்பதில் சிரமம், காரணம் புரியாத எடை இழப்பு, காய்ச்சல், மூட்டுக்களில் வலியுடன் பலவீனம் போன்றவை அறிகுறிகளாகும்.  இந்த அறிகுறிகள் இரு வாரங்களுக்கு மேல் நீடிக்கக் கூடும்.

பரிசோதனைகள் என்ன? மூட்டு வலி பாதிப்பைக் கண்டறிய ரத்தம், சிறுநீர்ப் பரிசோதனை செய்யப்படுகிறது. மூட்டுக்களில் உள்ள பசை, திரவம், தசையின் தன்மை ஆகியவை பரிசோதிக்கப்படுகின்றன. எக்ஸ்-ரே பெரும்பாலும் தேவைப்படாது.

ஹோமியோபதி சிகிச்சை என்ன? மூட்டு நோய்களில் பல வகை உள்ளதால் அதன்  தன்மை, காரணம், பாதிப்பின் தீவிரம், எந்த மூட்டு பாதிக்கப்பட்டுள்ளது, நோயாளியின் வயது, தொழில், தினசரி செயல்பாடுகள், குடும்பத்தினருக்கு இந்தப் பாதிப்பு உள்ளதா போன்றவற்றின் அடிப்படையில் ஹோமியோபதி மருத்துவ முறையில் ஆலோசனைகளும் சிகிச்சைகளும் தீர்மானிக்கப்படுகின்றன.

ஹோமியோபதி-சிறப்பு அம்சம் என்ன? மூட்டு நோய்க்கான அறிகுறிகளின் அடிப்படையில் மட்டுமின்றி, நோய்க்கான காரணத்தை இலக்காகக் கொண்டு சிகிச்சை அளிப்பது ஹோமியோபதி மருத்துவ முறையின் சிறப்பு அம்சமாகும். அதாவது, மூட்டு நோய்க்கான காரணத்தை அகற்ற ஹோமியோபதி மருத்துவ முறையில் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மேலும் மூட்டு வலியைக் குறைத்து, மேலும் பாதிப்பு ஏற்படாமலிருக்கவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  சரியான உணவு-தொடர் உடற்பயிற்சி-போதுமான ஓய்வு ஆகியவை மூலம் ஆரம்ப நிலை மூட்டு நோயை எளிதாகக் குணப்படுத்தலாம். தகுதியான ஹோமியோபதி மருத்துவரிடம் சென்று மூட்டு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால், உரிய சிகிச்சை மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT