மருத்துவம்

தொல்லை கொடுக்கிறதா வயிறு?

பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், பொருமல், வயிற்றைப் பிசைதல், இறுக்கிப் பிடித்தல், வயிற்றில் வலி, உப்புசம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள்-அசெüகரியங்கள் ஏற்படுவது சகஜம். இந்

டாக்டர் ஏ.டபிள்யு

பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் எரிச்சல், பொருமல், வயிற்றைப் பிசைதல், இறுக்கிப் பிடித்தல், வயிற்றில் வலி, உப்புசம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகள்-அசெüகரியங்கள் ஏற்படுவது சகஜம்.

இந்தப் பிரச்னைகள் சிலருக்கு அவ்வப்போது ஏற்படுவதும் மறைவதுமாக இருக்கும். மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிறு எரிச்சல் பிரச்னைக்கு அறிகுறிகளின் அடிப்படையில் அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிகுறிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பது நிரந்தரத் தீர்வாகாது. உணவு முறை, கால இடைவெளி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டாலே சிலருக்கு பிரச்னைகள் நீங்கி விடும்.

அக்குபஞ்சர் அளிக்குமே தீர்வு: இந்தப் பிரச்னைகளுக்கு அக்குபஞ்சர் சிறந்த தீர்வை அளிக்கிறது. ஜீரணத்துக்கு முக்கியமான உறுப்புகளை கல்லீரலிலும், கணையத்திலும் சக்தி ஓட்டம் தடைபட்ட நிலையில்தான் வயிற்றுப் பிரச்னைகள் பலவும் ஏற்படுகின்றன.

கல்லீரலில் ஏற்படும் தடை, வயிறு உப்புசம், மலச்சிக்கல், ஏப்பம், எரிச்சல், மனச்சோர்வை ஏற்படுத்தும். கணையத்தில் ஏற்படும் தடை, களைப்பு-வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். கல்லீரலிலும் கணையத்திலும் சக்தி ஓட்டத்தைச்

சீர்படுத்துகிறது.

இதனால் ஜீரண மண்டலத்தில் உணவு இருக்க வேண்டிய கால அளவில் இருந்து சீரான வேகத்தில் அசைந்து இறுதியில் மலக்குடலைச் சென்று சேரும். வயிற்றில் வலி, வாயு போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

புதிய சிம் கார்ட் வாங்கியவருக்கு கிரிக்கெட் வீரரின் பழைய மொபைல் எண் ஒதுக்கப்பட்டதால் குழப்பம்

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சிலர்! டிரம்ப்புக்கு மத்திய அமைச்சர் பதிலடி?

SCROLL FOR NEXT