முகப்பு
மருத்துவம்

கீழ் முதுகு வலிக்கு அமெரிக்க கருவி சிகிச்சை

முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் காயம், முதுமை ஆகியவற்றை முக்கியமாகக் கூறலாம். தண்டுவடப் பகுதி ஆரோக்கியமாகவும், உறுதியாகவும், நெகிழ்ந்து கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தண்டுவடப்பகுதிய

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:05 PM
பகிர்:

முதுகு வலிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் காயம், முதுமை ஆகியவற்றை முக்கியமாகக் கூறலாம்.

தண்டுவடப் பகுதி ஆரோக்கியமாகவும், உறுதியாகவும், நெகிழ்ந்து கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தண்டுவடப்பகுதியில் உள்ள தட்டுகள் இறங்குதல் அல்லது நகர்தல், நரம்புகளை அழுத்துதல், தேய்மானம் அடைதல்,. விரிவடைந்து விடுதல் ஆகியவற்றின் காரணமாக வலி, மரத்துப் போகுதல் ஆகிய விளைவுகள் ஏற்படுகின்றன.

இத்தகைய பிரச்னைக்கு அறுவைச் சிகிச்சை செய்யாமல், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள "ஸ்பைனல் டீகம்ப்ரஷன் யூனிட்' என்ற நவீன இயந்திரத்தின் மூலம் தீர்வு காணலாம். இந்த நவீன கருவி சிகிச்சை மூலம் 86 சதவீதம் பேருக்கு நிவாரணம் கிடைப்பது நிரூபணமாகியுள்ளது.

கீழ் முதுகுவலி உள்ளவர்கள் சுமார் 15 முதல் 20 தடவை ஒரு மணி நேரத்திற்கு இந்த இயந்திரத்தின் மூலம் சிகிச்சை பெற வேண்டும். இந்தச் சிகிச்சையில் முதுகுத்தண்டு இலகுவாக்கப்பட்டு இறுக்கம் குறைக்கப்பட்டு, இரத்த ஒட்டம் சீராக்கப்படுகிறது. இதனால் படிப்படியாக வலி மறைந்து உணர்வுகளும் திரும்புகின்றன. முதுகுத் தண்டின் நெகிழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அனைத்து வேலைகளையும் எளிதில் செய்ய முடியும்.

"பேக் அண்ட் நெக்' கிளினிக்,

எண். 1, "ஆ' பிளாக் ஐஐ அவென்யு, அண்ணாநகர்,

சென்னை - 600102. தொ.பே. : 044-26204455.

info@thebackandneck.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.