மருத்துவம்

கோடியில் ஒருவருக்கு வலது பக்கத்தில் இதயம்

பொதுவாக மனிதர்களுக்கு இடது பக்கத்தில் இருக்கும் இதயம், கோடியில் ஒருவருக்குத்தான் வலது பக்கத்தில் இருக்கும். அதுபோன்று கோடியில் ஒருவர் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த போது மருத்துவர்கள்,

தினமணி

பொதுவாக மனிதர்களுக்கு இடது பக்கத்தில் இருக்கும் இதயம், கோடியில் ஒருவருக்குத்தான் வலது பக்கத்தில் இருக்கும். அதுபோன்று கோடியில் ஒருவர் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த போது மருத்துவர்கள், அவருக்கு வலது பக்கத்தில் இதயம் இருப்பதனைக் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

இடது பக்கத்தில் இருக்க வேண்டிய இதயம் வலது பக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய கல்லீரல், குடல் பகுதிகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும் 58 வயதான இந்திரா என்ற பெண்மணி இதய வலி தொடர்பாக சிகிச்சை பெற சென்னை பொது மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த இவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் வலது பக்கத்தில் இதயம் அமைந்திருப்பது தெரிய வந்தது. ஆனால், வலது பக்கத்தில் இதயம் இருப்பதால் எவ்வித பிரச்சினையும் இல்லை. இடது பக்கத்தில் இருந்தால் அது எவ்வாறு இயங்குமோ அவ்வாறேதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பேஸ்மேக்கர் கருவியை மருத்துவர்கள் பொருத்தி உள்ளனர்.

பூரண குணம் அடைந்து வரும் இந்திரா, தனக்கு வலது பக்கத்தில் இதயம் இருப்பது குறித்து முதலில் அதிர்ச்சி அடைந்ததாகவும், பிறகு மருத்துவர்கள் இதனால் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறியதால் நிம்மதி அடைந்ததாகவும் கூறுகிறார்.

ஒரு முறை நெஞ்சு வலி பிரச்சினைக்காக மருத்துவமனைக்குச் சென்ற போது, இந்திராவிற்கு வலது பக்கத்தில் இதயம் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியதாகவும், அதுபற்றி அப்போது பெரிதாக ஒன்றும் புரியவில்லை என்றும், அவர்கள் கூறிய விஷயம் ஞாபகத்தில் கூட இல்லை என்றும் இந்திராவின் கணவர் அழகுவேல் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நிலவரம்!

ஜக்தீப் தன்கர் எங்கே? அமித் ஷாவுக்கு சஞ்சய் ரௌத் கடிதம்

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் விபத்து: 2 போலீஸ் அதிகாரிகள் பலி

சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு - சென்னையில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT