மருத்துவம்

பைபாஸ் அறுவை சிகிச்சை... கவனிக்க வேண்டிய விஷயங்கள்

பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், இதய நோய் மீண்டும் தங்களைத் தாக்கும் அபாயத்தைத் தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவும் தங்களது அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்து கொள்வது மிகவும் அவசியம்.

க. தங்கராஜா

பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், இதய நோய் மீண்டும் தங்களைத் தாக்கும் அபாயத்தைத் தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவும் தங்களது அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்து கொள்வது மிகவும் அவசியம்.

வீட்டில் முதல் வாரம்: பை-பாஸ் அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு, முதல் வாரத்தில் உங்களது அன்றாட வேலைகளை பழையபடி தொடர்வது முக்கியம். சில நேரங்களில் ஒரு சிறு வேலைகூட, உங்களை களைப்படையச் செய்யும். மூச்சு விடுவதும் சிரமமாக இருக்கும். ஆனால் இதற்காக கவலைப்படத் தேவையில்லை. இது சாதாரண விஷயம்தான்.

நீங்கள் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், மீண்டும் உங்கள் தினசரி வேலைகளைத் தொடங்கும் முன்பு சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும். 4 முதல் 8 வாரத்தில் உங்களது இயல்பான நிலை மீண்டும் ஏற்படும்.

ஓய்வுக்கும் திட்டமிடுங்கள்: உங்களுடைய தினசரி வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுப்பது முக்கியம். அன்றாட வேலைகளும் உடற்பயிற்சிகளும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு முக்கியமானதாக இருந்தாலும், சரியான வேலைக்கும் அதிகப்படியான வேலைக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது.

உங்கள் தினசரி வேலைகளைத் திட்டமிடுவதுபோல் அவ்வப்போது ஓய்வெடுக்கவும் திட்டமிடுதல் முக்கியம். இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம் என்பதை உறுதி செய்து கொள்ளவும். முதல் சில வாரங்களில் தினமும் பகலில் ஒரு குட்டித் தூக்கம் தூங்கலாம்.

உடற்பயிற்சி-நடைப் பயிற்சி: நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்த காலத்தில் நடைப்பயிற்சி செய்யத் தொடங்கி இருப்பீர்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது உங்களுடைய உடல் பலத்தை மேம்படச் செய்ய உதவும். உங்கள் இதயத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

நடைப் பயிற்சி செய்வதற்கு சமதள இடத்தைத் தேர்வு செய்து கொள்ளவும். தையல்களைப் பிரித்த பிறகு ஒரு பூங்காவிலோ அல்லது வளாகத்திலோ நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் வெளிப்படுத்தும் சக்தியின் விகிதாசாரம்தான் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

தொடரும்..

டாக்டர் பிரசாந்த் வைஜியநாத்,
இதய-நுரையீரல் அறுவைச் சிகிச்சை நிபுணர்,
கேஎம்சிஎச் மருத்துவமனை, கோவை.

தினமணி மருத்துவ மலர் (2014-15)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT