மருத்துவம்

மூளை ரத்தக் குழாயில் அடைப்பு: அரசு மருத்துவமனையில் நுண்துளை சிகிச்சை

தினமணி

மூளை ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நுண்துளை சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சியைச் சேர்ந்த தொழிலாளி மாயன்(54). இவருக்கு 6 மாதங்களாக கடும் தலைவலி ஏற்பட்டு, வலப்புற கண் வெளியே வந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதனால், அவருக்கு எழுத்துகளும், பொருள்களும் இரண்டிரண்டாகத் தெரியத் தொடங்கியது. பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற பின்பு, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு மூளையில் 8 இடங்களில் அடைப்பு இருந்ததால், நுண்துளை மூலம் முதல்வரின் மைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஊடுகதிரியக்க நிபுணர் பெரியகருப்பன் வியாழக்கிழமை கூறியது:-

மாயனுக்கு இடுப்புப் பகுதியில் ஒரு துளையிடப்பட்டு அதன் வழியாக சிறிய குழாய் சொருகப்பட்டது. அதன் வழியாக அதிர்வலைகளை செலுத்தி அடைப்பு ஏற்பட்டிருந்த இடத்தில் உள்ள ரத்தக்கட்டிகள் கரைக்கப்பட்டன. 8 இடங்களிலும் இதே முறையைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மூளையில் ஏற்படும் கட்டி, ரத்தக்கட்டு, உடலில் பிற பகுதிகளில் ரத்தக்குழாய்களில் ஏற்படும் ரத்தக்கசிவு, அடைப்பு ஆகியவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT