மருத்துவம்

கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை

தினமணி

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ரோபோடிக் இயந்திரத்தின் உதவியுடன் பெண்ணுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனைத் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
ரோபோடிக் அறுவை சிகிச்சையானது மருத்துவர்கள் கன்சோல் என்ற அமைப்பின் முன்பு அமர்ந்து, டாவின்சி என்ற நவீன ரோபோட் இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சிகிச்சை முறையால் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதில்லை. குறைந்த நேர மயக்கம், குறைவான வலியே இருக்கும். மேலும், மருத்துவமனையில் 3 நாள்கள் தங்கினாலே போதுமானது. தழும்புகள் ஏற்படாது.இதன் மூலமாக சிக்கலான அறுவை சிகிச்சை, பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு பழுது, வால்வு மாற்று அறுவை சிகிச்சை, கட்டிகள் அகற்றுதல் போன்ற சிகிச்சைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

கோவை மண்டலத்தில் முதல் முறையாக 29 வயதான பெண்ணுக்கு கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. இருதயத்தில் துளையுடன் பிறந்த அவருக்கு இந்த சிகிச்சை மூலமாகத் துளை அடைக்கப்பட்டது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

கௌதம் கம்பீருக்கு வெற்றுக் காசோலை வழங்கிய ஷாருக்கான்..?

இந்த வாரம் கலாரசிகன் - 26-05-2024

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT