மருத்துவம்

மூலத்தில் உண்டாகும் பௌத்திர கட்டிகளை குணமாக்க உதவும் கசாயம்

மூல நோய் மற்றும் பௌத்திர கட்டிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்தக் கசாயத்தை தயார் செய்து..

கோவை பாலா

தண்டுக் கீரை வெந்தய கசாயம்

தேவையான பொருட்கள்

தண்டுக் கீரை      -  ஒரு கைப்பிடி

வெந்தயம்            -   10 கிராம்

சீரகம்                    -   5 கிராம்

செய்முறை

முதலில் தண்டுக் கீரையை எடுத்து சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள தண்டுக் கீரையைச் சேர்த்து அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து பாதி அளவாக சுண்ட வைத்து அந்தச் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு மஞ்சள் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.

பயன்கள்

மூல நோய் மற்றும் பௌத்திர கட்டிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்தக் கசாயத்தை தயார் செய்து காலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூல நோய்களும், மூலத்தில் உண்டாகும் பௌத்திர கட்டிகளையும் குணமாக்க உதவும் அருமருந்து.

இரவு படுக்கப்போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்
Cell  :  96557 58609   ,  73737 10080
Covaibala15@gmail.com  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT