மருத்துவம்

எப்படிப்பட்ட இருமலையும் குணப்படுத்தும் அருமருந்து

கோவை பாலா

நாட்பட்ட இருமலால் அவதிப்படுபவர்கள் வெந்தயக் கீரை உலர் திராட்சை கசாயத்தை குடித்துவர விரைவில் குணமாகும். 

தேவையான பொருட்கள்

வெந்தயக் கீரை        -   ஒரு கையளவு

உலர் திராட்சை           -   10

சீரகம்                            -   அரை ஸ்பூன்

செய்முறை

வெந்தயக் கீரையை சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள வெந்தயக் கீரை, உலர் திராட்சை மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நீரில் வெந்தயக் கீரை நன்கு கொதித்து அந்த நீரை 150 மி.லி அளவாக சுண்டவைத்து  இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும். 

பயன்கள்

நாட்பட்ட இருமல், தொடர் இருமல், வறட்டு இருமல்,  சளியுடன் கூடிய இருமல் உள்ளவர்கள் இந்தக் கசாயத்தை தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 ,  73737 10080
Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT