செய்திகள்

720 பேருக்கு சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை

தினமணி

சென்னையில் நடைபெற்ற சர்க்கரை நோய் பரிசோதனை முகாமில், 720 பேருக்கு சர்க்கரை நோய், அதன் தொடர் விளைவுகளைத் தடுத்துக் கொள்வதற்கான ஆலோசனைகளை மருத்துவர்கள் இலவசமாக வழங்கினர்.
உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, சூளைமேடு அருணா சர்க்கரை நோய் சிகிச்சை மையம், சூளைமேடு எக்ஸ்னோரா ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் மொத்தம் 720 பேருக்கு வெறும் வயிற்றிலும் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்தும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டது. வெறும் வயிற்றில் ரத்தப் பரிசோதனை செய்தவுடன் இலவசமாக சிற்றுண்டி வழங்கப்பட்டது.
முகாமில் பங்கேற்றோரில் 612 பேர் (85 சதவீதம்) ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆவர். 72 பேருக்கு (10 சதவீதம்) சர்க்கரை நோய் இல்லை. முகாமுக்கு வந்தவர்களில் 36 பேருக்கு (5 சதவீதம்) சர்க்கரை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பரிசோதனை முகாமில் ரத்த அழுத்த அளவும் பரிசோதனை செய்யப்பட்டது. 216 பேருக்கு ரத்த அழுத்த அளவுகள் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த மூன்று மாத ரத்த சர்க்கரை அளவை மதிப்பிடும் எச்பிஏ1சி ரத்த பரிசோதனை, ரத்த கொழுப்புச் சத்து அளவுகள் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, கால் நரம்பு பரிசோதனை, விழித்திரை (கண் பரிசோதனை) ஆகியவையும் தேவைப்பட்டோருக்கு இலவசமாகச் செய்யப்பட்டன.
சர்க்கரை நோய் வராமல் தடுத்துக் கொள்வதற்கும் சர்க்கரை நோய் இருந்தால் அதை சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான உணவு, உடற்பயிற்சி ஆலோசனைகளை டாக்டர்கள் அ.பன்னீர்செல்வம், பி.டி.பிரபாகரன், ப.அருண்குமரன் மற்றும் கண் மருத்துவர் ப.ஆர்த்தி ஆகியோர் அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT